Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மே 2, 2019









உலக செய்திகள் 

1. சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பொதுமக்கள் சைபர் பிரச்சனைகளை சமாளிக்க பாதுகாப்பு சைபர் ஏஜென்சி (DCA) என்ற அமைப்பை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உருவாகியுள்ளது. மூத்த கடற்படை அலுவலக ரியர் அட்மிரல் மோஹித் குப்தா DCA இன் முதல் தலைவராக பதவி வகிக்க உள்ளார்.

2. ஜப்பான் நாட்டின் 125வது மன்னர் அகிஹிட்டோ பதவி விலகியதை அடுத்து ஜப்பானின் 126 வது மன்னரான நருஹிட்டோ பதவி ஏற்றார்.

தேசிய செய்திகள் 

3. ஃபிட்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-20 ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

4. கர்நாடகா உயர்நீதிமன்றதின் தலைமை நீதிபதியாக  அபஸ் S.ஓகா நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ராஜஸ்தான் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  ஸ்ரீபதி ரவீந்திரா  நியமிக்கப்பட்டுள்ளார்.

6. சத்திஸ்கர் உயர்நீதிமன்றதின் தலைமை நீதிபதியாக  பி ராமச்சந்திர மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

7. 2019 ஆம் ஆண்டின் உலகளாவிய உணவு கொள்கையை சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

8. International Golf Federation (IGF) சார்பில் சிறந்த சாதனையாளர்களுக்கான விருது கோல்ப் விளையாட்டு வீரரான  ககன்ஜித் புல்லர் என்பவருக்கு வழங்கப்பட்டது.

9. லோக்பால் அமைப்பின் சிறப்பு கடமை அதிகாரியாக திலீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

10. க்ரிக்கிஸ்தான் நாட்டை 5 இராணுவ வீராங்கனைகளுக்கு தமிழ்நாட்டின் சென்னையில் இராணுவ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

11. Chequered Brilliance: The Many Lives of V K Krishna Menon என்ற புத்தகத்தை ஜெயராம் ரமேஷ் எழுதியுள்ளார்.

12. நேபாள அரசு எவரெஸ்ட் பகுதியை சுத்தம் செய்யும் பணியை தொடங்கியுள்ளது.

வர்த்தக செய்திகள் 

13. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்த தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

14. ஐபில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஷ்ரேயஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 19வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

15. உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா(ஜப்பான்) முதலிடத்திலும், கிவிடோவா(செக் குடியரசு) இரண்டாவது இடத்திலும், சிமோனா ஹாலெப்(ருமேனியா) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

16. தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சியில் நடைபெற்ற மாநில யூத் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் 2019 போட்டியில் சென்னை அணி ஈரோடு அணியை வீழ்த்தி பட்டம் பெற்றது.

17. சீனாவின் சியானில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2019 பதக்க பட்டியலில் இந்தியா 16 பதக்கங்களுடன் 8வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் ஈரான் முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

18. சீனாவின் நிங்போவில் நடைபெற்ற ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 5 பதக்கங்களுடன் 10 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் சீனா முதலிடத்திலும் தென்கொரிய இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.